SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிவகாசி மாநகராட்சியில் மண்டல தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

3/31/2022 2:04:30 AM

சிவகாசி, மார்ச் 31: சிவகாசி மாநகராட்சிக்கான 4 மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்களுக்கான மறைமுகத் தேர்தல் நேற்று நடந்தது. இதற்கான வேட்பாளர்கள் திமுக தலைமை கழகம் சார்பில் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டனர். அதன்படி வேட்பாளர்களாக முதல் மண்டலத்திற்கு திமுக கவுன்சிலர் குருசாமி, 2வது மண்டலத்திற்கு திமுக கவுன்சிலர் அழகுமயில், 3வது மண்டலத்திற்கு திமுக கவுன்சிலர் சேவுகன், 4வது மண்டலத்திற்கு திமுக கவுன்சிலர் சூர்யா ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர். சிவகாசி மாநகராட்சி அலுவகத்தில் நேற்று காலை ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இதில் சிவகாசி மாநகராட்சி பகுதியில் உள்ள 4 மண்டல தலைவர் பதவிக்கும் தலைமை கழகம் அறிவித்த வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதேபோல் நிலைக்குழு உறுப்பினர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நேற்று மதியம் நடந்தது. இதில் 36 பேர் உறுப்பினர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இன்று நடைபெறும் கணக்கு குழு தலைவர், பொது சுகாதார குழு தலைவர், கல்விக் குழு தலைவர், வரிவிதிப்பு மற்றும் நிதி குழு தலைவர், நகரமைப்பு குழு தலைவர், பணிகள் குழு தலைவரை தேர்வு செய்யவுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • israel-desert-24

    இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!

  • Ecuador_protests

    ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!

  • pondi-scl-23

    புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!

  • admk-23

    50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!

  • Goat_Pakistan

    பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்