கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் 150 நடைபாதை கடைகள் அகற்றம்: பிளாஸ்டிக் விற்ற 4 கடைகளுக்கு சீல்
3/26/2022 12:12:57 AM
அண்ணாநகர்: கோயம்பேடு மார்க்கெட் வளாகத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதாக வந்த புகாரின் பேரில், மார்க்கெட் நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில், சிஎம்டிஏ அதிகாரிகள் நேற்று அதிகாலை திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 4 கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது தெரியவந்தது. அங்கிருந்து 150 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, அந்த கடைகளை பூட்டி சீல் வைத்தனர். தொடர்ந்து பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தும் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையின் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட கடைகளை சிஎம்டிஏ அதிகாரிகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த பெண் வியாபாரி ஒருவர், கோயம்பேடு மார்க்கெட் காவலாளியை தாக்கினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து, 100க்கும் மேற்பட்ட கோயம்பேடு போலீசார், அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அங்கிருந்து 150க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது. தடையை மீறி நடைபாதையில் கடை நடத்தியவர்களுக்கு ₹20,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கவர்னர் மாளிகையில் நவராத்திரி கொலு; இன்று முதல் 5ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்: மின்னஞ்சலில் முன்பதிவு
சென்னையில் கடந்த ஓராண்டில் கஞ்சா விற்ற 635 பேரின் வங்கி கணக்கு முடக்கம்: போலீசார் நடவடிக்கை
தொழிலதிபர் வீட்டில் பல லட்சம் திருட்டு விவகாரம்: கூலிக்கு ஆள் வைத்து கொள்ளையடித்து விட்டு நகை, பணத்துடன் நேபாளம் தப்பிய காவலாளி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சார்பில் மொழிபெயர்ப்பு நாள் விழா: தமிழறிஞர்கள் பங்கேற்பு
எம்.சி.ரோட்டில் உள்ள துணிக்கடையில் தீவிபத்து
கஞ்சா விற்பனை செய்த வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!
உக்ரைனில் ஹெலிகாப்டர் விழுந்து நொருங்கியதில் உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் உயிரிழப்பு..!!