மன்னார்குடியில் கொரோனாவால் உயிரிழந்த எஸ்எஸ்ஐ குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிதி உதவி
3/23/2022 1:04:21 AM
மன்னார்குடி, மார்ச் 23: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி முல்லை நகரை சேர்ந்தவர் ஜீவானந்தம் (57). இவருக்கு வானமாதேவி என்ற மனைவியும், அசோக் குமார் என்ற மகனும், வித்யா என்ற மகளும் உள்ளனர். இவர் மன்னார்குடி நகர காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐயாக வேலை பார்த்து வந்தார்.எஸ்எஸ்ஐ ஜீவானந்தம் பணியில் இருந்த போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 6ம் தேதி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ 25 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். இந்த நிலையில், திருவாரூர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த எஸ்எஸ்ஐ ஜீவானந்தம் மனைவி வானமாதேவி, மகன் அசோக்குமார் ஆகியோரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு நேரில் அழைத்து அவர்களிடம் தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சத்திற்கான காசோலையை வழங்கி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் செய்திகள்
குளிகரை தேசிய வங்கி கிளையில் தமிழ்மொழி தெரிந்தவரை மேலாளராக நியமிக்க வேண்டும்
திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்
வலங்கைமான் அருகே மளிகை கடை தீயில் எரிந்து சேதம்
வலங்கைமானில் அதிமுக நகர நிர்வாகிகள் கூட்டம்
முத்துப்பேட்டை நகரில் சாலை சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கிறது
கூத்தாநல்லூர் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் இளங்கலை பாடப்பிரிவுகளில் சேர கலந்தாய்வு
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...