ஊத்துக்கோட்டையில் இலவச கண் பரிசோதனை முகாம்
3/1/2022 2:13:24 AM
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டையில் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடந்தது. ஊத்துக்கோட்டையில் அரிமா சங்கம் சார்பில் ஊத்துக்கோட்டை அரிமா சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில், அரிமா சங்க தலைவர் டி.பி.துளசிராம் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.கதிரவன், பொருளாளர் கே.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் அஞ்சு, கிரண் தலைமையில் 17 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் கண் புரை, கண் பார்வை குறைபாடு உள்ளிட்ட கண் சம்மந்தப்பட்ட பல்வேறு நோய்களுக்கு 300 பேருக்கு சிகிச்சை அளித்தனர். இதில், அறுவை சிகிச்சைக்காக 50 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர், அரிமா சங்கம் சார்பில், ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 3 மெத்தைகள், லச்சிவாக்கம் ஊராட்சி பெரம்பூர் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2 மெத்தைகள் என 5 மெத்தைகள் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், அரிமா சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சியில் அனைத்து வீடுகளிலும் பறக்கும் தேசிய கொடி; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு
பூண்டி ஊராட்சியில் 1232 வீட்டிற்கும் தேசிய கொடி
மடிப்பாக்கம் பிரின்ஸ் பள்ளியில் அறிவியல் கண்காட்சி துவக்க விழா; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்பு
அனைத்து நிறுவனங்களிலும் தேசிய கொடி
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 526 ஊராட்சிகளில் கிராம சபை வரும் 15-ம் தேதி நடத்த வேண்டும்; கலெக்டர் அறிவிப்பு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!