SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி போக்சோவில் கைது

2/25/2022 5:04:19 AM

திருவண்ணாமலை, பிப்.25: சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த பாலியப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகன் ரஜினி(46), கூலித்தொழிலாளி. திருமணமானவர். இவர், அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் திருவண்ணாமலை மகளிர் போலீசில் நேற்று புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த இன்ஸ்பெக்டர் அன்பரசி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித்தொழிலாளி ரஜினியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து செய்தார். பின்னர், அவரை மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்