SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தாசில்தார் பேச்சுவார்த்தை

2/25/2022 5:04:12 AM

திருவண்ணாமலை, பிப்.25: திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கை புனல்காடு பகுதியில் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கிராம மக்கள் தெரிவித்தனர். திருவண்ணாமலை நகராட்சி குப்பை கிடங்கு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஈசானியம் மைதானம் அருகே அமைந்திருக்கிறது. இந்நிலையில், நகரின் மையப் பகுதி மற்றும் கிரிவலப் பாதைக்கு அருகே அமைந்துள்ள குப்பை கிடங்கை நகரின் ஒதுக்குப்புறமான பகுதியில் இடமாற்றம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன்படி, திருவண்ணாமலை- காஞ்சி சாலையில் புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கை மாற்ற இடம் தேர்வு செய்யப்பட்டது. இது தொடர்பாக, கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அதிகாரிகள் நேரடி ஆய்வு நடத்தினர். இந்நிலையில், இந்த பகுதியில் குப்பை கிடங்கு அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் கிராம மக்கள் தெரிவித்தனர். எனவே, நேற்று மாலை திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சுரேஷ் தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, அதில் கலந்து கொண்ட கிராம மக்கள் தங்களுடைய கிராமத்துக்கு அருகே குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது, அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும், நிலத்தடி நீர் மாசுபடும் என தெரிவித்தனர். எனவே, இது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைப்பதாக தாசில்தார் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • gandhi-birthday

    காந்தி பிறந்தநாளையொட்டி கண்கவர் டிரோன் கண்காட்சி

  • tirupati-4th-day-30

    திருப்பதி பிரமோற்சவம்: 4ம் நாளில் கற்பக விருட்ச வாகனத்தில் ராஜமன்னார் அலங்காரத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா..!!

  • ian-florida

    புளோரிடாவில் இயான் சூறாவளியால் கடுமையான சேதம்.. மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்..!

  • America_electric plane

    முற்றிலும் மின்சாரத்தில் இயங்கும் முதல் விமானம்!: அமெரிக்காவில் சோதனை ஓட்டம் வெற்றி...!!

  • chennai-heavy-rain

    சென்னையில் பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்