திருச்சுழி அருகே ரூ.1.18 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்
2/15/2022 2:38:33 AM
திருச்சுழி, பிப். 15: தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலின் போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி கடந்த மாதம் கூட்டுறவு வங்கியில் 5 சவரன் குறைவாக வைக்கப்பட்ட நகைகளை தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஆணைக்கிங்க விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே முத்துராமலிங்கபுரம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் நகைக்கடன் தள்ளுபடிக்கான விழா நடைபெற்றது. இவ்விழாவை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், ராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர். ஒன்றிய பெருந்தலைவர் பொன்னுத்தம்பி, வடக்கு ஒன்றிய செயலாளர் சந்தனபாண்டி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் செந்தில்குமார், துணை பதிவாளர் ஜெயமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த விழாவில் சுமார் 1 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான சுமார் 420 பயனாளிகளுக்கு கூட்டுறவு சங்க நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ்களை அமைச்சர்கள் வழங்கினர்.
மேலும் செய்திகள்
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திமுக உட்கட்சி தேர்தல் சிவகாசி மாநகர பொறுப்புகளுக்கு இன்று விருப்ப மனு பெறப்படும் மாநகர திமுக பொறுப்பாளர் தகவல்
சிவகாசியில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கல்வி நிறுவன கட்டிடங்களுக்கு அனுமதி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு கலெக்டர் மேகநாதரெட்டி தகவல்
அரசு அருங்காட்சியகத்தில் ஆக.14ல் மாணவர்களுக்கு மாறுவேட போட்டி 1 முதல் 8 வரை படிப்போர் பங்கேற்கலாம்
ராஜபாளையத்தில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!
தென்கொரியாவை புரட்டிபோட்ட கனமழை!! இதுவரை 9 பேர் பலி..
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!