SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மன்னார்குடி வந்தது குடியரசு தினவிழா அலங்கார ஊர்திகள்

2/11/2022 12:10:37 AM

மன்னார்குடி, பிப்.11: மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட தேரடி திடலில் மக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள விடுதலை போரில் தமிழகத்தின் பங்களிப்பினை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்ட 2 அலங்கார ஊர்திகளை மாணவ, மாணவியர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் விடுதலை போரில் தமிழகத்தின் பங்களிப்பினை போற்றுகின்ற வகையில் வடிவமைக்கப்பட்டு பங்கேற்ற 2 அலங்கார ஊர்திகள் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட தேரடி திடலில் மக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துவதற்காக மாவட்ட எல்லையான வடுவூருக்கு நேற்று காலை வந்தது. அலங்கார ஊர்திகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், எம்எல்ஏ., டிஆர்பி ராஜா, எஸ்பி., விஜயகுமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு ஆகியோர் மலர்தூவி வரவேற்று பார்வையிட்டனர். மாணவ, மாணவிகள், பொதுமக்கள் ஆர்வமுடன் ஊர்திகளை கண்டுகளித்தனர்.

இந்த 2 அலங்கார ஊர்திகளில் ஒன்றில் பாரதியார், வ.உ.சி., தியாகி.சுப்ரமணிய சிவா, தியாகி சேலம் விஜயராகவாச்சாரியார் ஆகிய தலைவர்களின் உருவச் சிலைகளும், மற்றொருன்றில் பெரியார், ராஜாஜி, முத்துராமலிங்க தேவர், காமராஜர், ரெட்டமலை சீனிவாசன், வாஞ்சிநாதன், தீரன் சின்னமலை, திருப்பூர் குமரன், தியாகி வ.வே.சு.அய்யர், காயித்தே மில்லத், தஞ்சை ஜோசப் கொர்னேலியஸ் செல்லதுரை குமரப்பா, கக்கன் ஆகிய தலைவர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றுள்ளன.

இந்த 2 அலங்கார ஊர்திகளும் நேற்று காலை முதல் இரவு வரை மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட, தேரடி திடலில் காட்சிப்படுத்தப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் கலைப் பண்பாட்டுத்துறையின் சார்பில் பரதநாட்டியம், நாதஸ்வர இசை, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், டிஆர்ஓ., சிதம்பரம், தஞ்சை மண்டல இணை இயக்குநர் கிரிராஜன், ஆர்டிஓ., அழகர்சாமி, நகராட்சி ஆணையர் சென்னுகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர் மணிவண்ணன், பிஆர்ஓ., செல்வகுமார், தாசில்தார்கள் ஜீவானந்தம், ஷீலா, திமுக நகர செயலாளர் வீரா கணேசன், நீடா ஒன்றிய குழு தலைவர் சோம.செந்தமிழ்செல்வலன், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் மேலவாசல் தனராஜ், மாநில மாணவரணி துணை செயலாளர் சோழராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • boat_medit

  மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!

 • nasa-project-artemis

  ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா

 • sea-18

  கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!

 • america_fire

  கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!

 • mexico-mine-17

  மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்