திருமயம் வட்டாரத்தில் விதைச்சான்று இயக்குனர் ஆய்வு
2/9/2022 12:08:48 AM
திருமயம், பிப்.9: திருமயம் வட்டாரத்தில் விதைச்சான்று இயக்குனர் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வேளாண் வட்டாரத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை இயக்குனர் சுப்பையா, ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை ஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள விதைகளின் தரம், விதை சேமிப்பு கிடங்கிள் விதைகளை பாதுகாக்கும் முறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.மேலும் விதை முளைப்புதிறன் பரிசோதனைகள், பதிவேடுகளை ஆய்வு செய்தார். அதனை தொடந்து கண்ணணூர் கிராமத்தில் விவசாயி பாலசுப்பிரமணியன் விதை பண்ணை வயலில் அறுவடை செய்யப்பட்டிருந்த ஆடுதுறை 39 சான்று நிலை வயல்மட்ட விதைக்குவியலை ஆய்வு செய்தார்.
அப்போது வேளாண்மை துணை இயக்குனர் மாநில திட்டம் மோகன்ராஜ், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் உமா, விதைச்சான்று உதவி துணை இயக்குநர் மாநில திட்டம் இயக்குநர் ஜெகதீஸ்வரி, விதை ஆய்வாளர் பாலையன் ஆகியோர் உடன் இருந்தனர்.
ஆய்விற்கான ஏற்பாடுகளை விதைச்சான்று அலுவலர்கள் மீனாள், இளஞ்செழியன், வட்டார வேளாண்மை அலுவலர் புனிதவதி, துணை வேளாண்மை அலுவலர் முருகன், உதவி விதை அலுவலர்கள் தங்கவேல்முருகன் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகள்
திருமயம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
கட்டுமாவடி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு வந்த 100 கிலோ ராட்சத திருக்கை மீன் ரூ.10 ஆயிரத்திற்கு விலை போனது
கந்தர்வகோட்டையில் பழுதடைந்து கிடக்கும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி கட்டிடம் புதிதாக கட்ட வலியுறுத்தல்
விராலிமலை அருகே விவசாய பண்ணையில் விஷ வண்டுகள் அழிப்பு
புதுகை மாவட்டத்தில் ஒன்றிய அரசின் கல்வி உதவித் தொகை பெற சிறுபான்மையின மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்
விராலிமலை பகுதியில் கன மழை
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காங். எம்.பி. ராகுல் காந்தி..!!
விலைவாசி உயர்வை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்: ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது..!!
இஸ்ரோவின் ராக்கெட்டுக்கு மென்பொருள் தயாரித்த அரசுப்பள்ளி மாணவிகளை நேரில் வாழ்த்திய அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்..!!
ஐஸ்லாந்து நாட்டில் எரிமலை வெடித்து சிதறி நெருப்பு ஆறு பாய்கிறது!!