தாய் இறந்த 3 மாதத்தில் கார் மோதி சிறுவன் பலி: உத்திரமேரூர் அருகே சோகம்
2/1/2022 12:52:19 AM
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே தாய் இறந்த 3 மாதத்தில், சிறுவன் வாகன விபத்தில் பரிதாபமாக இறந்தான். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. உத்திரமேரூர் அடுத்த ராவத்தநல்லூரை சேர்ந்தவர் மாரி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி மீனா. இவர்களது மகன் அஸ்வித் (11). களியாம்பூண்டி அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 3 மாதங்களுக்கு முன் மீனா, உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்தார். இதையடுத்து மாரி, மகனுடன் வசித்தார். இந்நிலையில், நேற்று மாலை சிறுவன் அஸ்வத், காரணி மண்டபத்தில் உள்ள கடைக்கு சைக்கிளில் புறப்பபட்டான்.
அப்பாது, தனியார் கம்பெனிக்கு சொந்தமான சோதனை ஓட்ட கார், வந்தவாசியில் இருந்து உத்திரமேரூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. காரணிமண்டபம் அருகே கார் வந்தபோது, திடீரென ஒரு நாய் சாலையின் குறுக்கே ஓடியது. இதனால் டிரைவர், நாய் மீது மோதாமல் இருக்க காரை திருப்பினார். அந்த நேரத்தில், அங்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்த அஸ்வித் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் அஸ்வித், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதை பார்த்ததும், காரை அங்கேயே நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பிவிட்டார். தகவலறிந்து பெருநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், காரை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். தாய் இறந்த 3 மாதத்தில், மகன் வாகன விபத்தில் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட நபர்களை பிடித்த காவலருக்கு அரிவாள் வெட்டு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு; அம்பேத்கர் சிலைக்கு காவித்துண்டு விசிக ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் மாநகராட்சியில் பல்துறை அலுவலர்கள் ஒருங்கிணைப்பு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் ஆர்த்தி அறிவிப்பு
சிறுகாவேரிப்பாக்கம் ஜெஜெ நகரில் பராமரிப்பில்லாமல் பாழாகும் சமுதாய கூடம்; சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!