SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு

1/29/2022 8:10:15 AM

தர்மபுரி, ஜன.29: தர்மபுரி நகராட்சி, 10 பேரூராட்சிகளில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஒரு நகராட்சி, 10 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமிருந்து வரும் புகார்களை பெற்று, சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையானது 24 மணி நேரமும் செயல்படும்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் தங்களது புகார்களை 04342-230849 என்ற எண்ணில் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். மேலும், தர்மபுரி நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களிலும், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது புகார்களை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் அமைக்கபட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம்.

தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் தொலைபேசி எண்கள் விபரம்:
தர்மபுரி நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆணையாளர் அலுவலகம்- 04342 - 260910, 10 பேரூராட்சிகள்: அரூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்- 04346- 222037, கடத்தூர் பேரூராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம்- 04346-265008, பாப்பாரப்பட்டி பேரூராட்சி- 04342- 248048, பென்னாகரம் பேரூராட்சி- 04342 -254073, கம்பைநல்லூர் பேரூராட்சி- 04346- 267460, பி.மல்லாபுரம் பேரூராட்சி- 04346 244437, பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி- 04346 246462, பாலக்கோடு பேரூராட்சி- 04348 222002, காரிமங்கலம் பேரூராட்சி- 04348 241248, மாரண்டஅள்ளி பேரூராட்சி- 04348 233355.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்