SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டுமனை பட்டா கேட்டு திருநங்கைகள் மனு

1/29/2022 8:09:46 AM

அரூர், ஜன.29: அரூர் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கனிமொழியிடம் திருநங்கைகள் நேற்று கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: அரூர் பகுதியில் 25 திருநங்கைகள் உள்ளோம். எங்களுக்கு வீட்டுமனை பட்டா வேண்டும் என தாசில்தார், ஆர்டிஓ, கலெக்டர் ஆகியோரிடம் பலமுறை புகார் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. வாடகை வீட்டில் இருந்து வருகிறோம்.

மூன்று மாதத்தில் வீட்டை காலி செய்ய சொல்லி, வீட்டின் உரிமையாளர்கள் விரட்டுகின்றனர். தமிழக அரசு எங்களுக்கு தனி நல வாரியம், ரேஷன் கார்டும், ஆதார் அட்டையில் திருநங்கைகள் என திருத்தம் செய்து வழங்கியுள்ளது. நாங்கள் சொந்த வீட்டில் குடியேற, ஒரே இடத்தில் தொகுப்பாக வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்