SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

1/29/2022 7:49:17 AM

சிவகங்கை, ஜன. 29:  குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக் குறிப்பில்  தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டப்படி தேசிய  விடுமுறை தினமான குடியரசு தினத்தன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு  நிறுவனங்கள், மோட்டா போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும்  தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும்.

விடுமுறை அளிக்கப்படாமல்  வேலை செய்ய அனுமதிக்க வேண்டுமானால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது  வேறொரு நாளில் மாற்று விடுப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு குடியரசு  தினத்தன்று தொழிலாளர் துணை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்களால்  மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வின் போது சட்டவிதிகளுக்கு முரணாக தொழிலாளர்களை  பணிக்கு அமர்த்திய மாவட்டத்தில் உள்ள 47 நிறுவனங்கள் மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்