SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காரைக்குடி நகராட்சியில் 97 வாக்குச்சாவடிகளில் 224 சிசிடிவி கேமரா கண்காணிப்பு ஆணையர் தகவல்

1/29/2022 7:49:06 AM

காரைக்குடி, ஜன, 29: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அனைத்துக்கும் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. காரைக்குடி நகராட்சியை பொறுத்தவரை 92,562 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் 45,202 பேர், பெண்கள் 47,352 பேர், இதரர் 8 பேர். 36 வார்டுகள் உள்ளன. வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்க வசதியாக 97 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் மட்டும் வாக்களிக்க 35 மையங்களும், பெண்கள் வாக்களிக்க 35 மையங்கள், அனைத்து வாக்களர்களுக்கான வாக்குச்சாவடி மையங்கள் 27 அமைக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளாக 11 மையங்கள் உள்ளன.

வேட்புமனு படிவம் வழங்கும் முதல் நாளான நேற்று 93க்கும் மேற்பட்டவர்கள் மனு பெற்றுள்ளனர். இதுகுறித்து ஆணையர் லட்சுமணன் கூறுகையில், ‘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளனர். 97 வாக்குச்சாவடி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்ல வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளது. தவிர வீல் சேர் தயார் நிலையில் உள்ளது. சுகாதாரமான குடிநீர், லைட், பேன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தவிர வாக்குப்பதிவை கண்காணிக்க வசதியாக மையங்களின் உள்ளே மற்றும் பொதுவான இடங்கள் என 224 இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட உள்ளன. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு என கடைசி ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு தேவையான பி.பி கிட் உள்பட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நோய் பாதிக்கப்பட்டவர்கள் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களிலேயே வாக்களிக்கலாம். 500க்கும் மேற்பட்டவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்கு எண்ணிக்கை அழகப்பா பாலிடெக்னிக்கில் நடைபெறும்’ என்றார். உடன் பொறியாளர் கோவிந்தராஜன் இருந்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்