திருப்புத்தூர், நெற்குப்பை பேரூராட்சிகளில் முதல் நாள் 90 மனுக்கள் விநியோகம்
1/29/2022 7:49:00 AM
திருப்புத்தூர், ஜன. 29: திருப்புத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புத்தூர் பேரூராட்சியில் 18 வார்டுகள், நெற்குப்பை பேரூராட்சியில் 12 வார்டுகள் உள்ளன. 2 பேரூராட்சிகளிலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சினர் மற்றும் சுயேச்சைகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட நேற்று முதல் வேட்பு மனுக்கள் விநியோகம் செய்யப்பட்ட நிலையில் முதல் நாளிலே திருப்புத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் 61 மனுக்களும், நெற்குப்பை பேரூராட்சி அலுவலகத்தில் 29 மனுக்களும் அரசியல் கட்சி பிரமுகர்கள், சுயேட்சைகள் என பலரும் வாங்கி சென்றுள்ளனர். ஆனால் நேற்று யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
மேலும் செய்திகள்
10 நாளில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு சிவகங்கை நகர்மன்ற தலைவர் அறிவிப்பு
தேவகோட்டை நகராட்சிக்கு புதிய ஆணையாளர்
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வு எழுதிய மாணவன்
கொளுஞ்சிப்பட்டியில் மீன்பிடி திருவிழா
காரையூரில் பெயிண்டர் தற்கொலை
9 ஆண்டுகளாக செயல்படாத தொழில் பூங்காவை முழுமையாக செயல்படுத்த வலியுறுத்தல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்