SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நகராட்சி, பேரூராட்சியில் மனு தாக்கல் செய்யலாம் திங்கள் முதல் சூடுபிடிக்குமென எதிர்பார்ப்பு

1/29/2022 7:48:47 AM

சிவகங்கை,  ஜன. 29:  சிவகங்கை மாவட்டத்தில்  சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, மானாமதுரை ஆகிய 4 நகராட்சிகள் மற்றும்  நாட்டரசன்கோட்டை, திருப்புத்தூர், பள்ளத்தூர், கானாடுகாத்தான், கண்டனூர்,  சிங்கம்புணரி, நெற்குப்பை, திருப்புவனம், இளையான்குடி, கோட்டையூர்,  புதுவயல் உள்ளிட்ட 11 பேரூராட்சிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க  உள்ளது. பேரூராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்  சம்பந்தப்பட்ட பேரூராட்சி அலுவலகங்களிலும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு  போட்டியிடும் பேட்பாளர்கள் சம்பந்தப்பட்ட நகராட்சி அலுவலகங்களில் மட்டும்  வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

வேறு எந்த அலுவலகத்திலும் வேட்பு  மனுக்கள் பெறப்படாது. பிப். 4ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை  வேட்பு மனுக்கள் பெறப்பட உள்ளது. பிப்.5ம் தேதி மனுக்கள் பரிசீலனை,  பிப்.7ம் தேதி மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். பிப்.19ம் தேதி  வாக்குப்பதிவும், பிப்.22ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்க உள்ளது. முக்கிய அரசியல் கட்சிகள் சார்பில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படாததால் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணியில் இன்னும்  வேட்பாளர்கள் ஈடுபடவில்லை.  இன்று, நாளை முக்கிய கட்சிகள் சார்பில்  போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது. நேற்று முதல்  வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் திங்கள்கிழமை முதல் மனு தாக்கல்  சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்