SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூர் மாநகராட்சியில் பெண்களுக்கு 30 வார்டு

1/29/2022 6:43:09 AM

திருப்பூர், ஜன.29:  திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகள் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இதில் ரிசர்வ் பொது வார்டுகளாக 36 மற்றும் 59 ஆகிய புதிய வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் புதிய வார்டு 36 என்பது பழைய வார்டு அடிப்படையில் 46 மற்றும் 48 ஆகிய வார்டுகளின் சில பகுதிகள் உள்ளடக்கியது. புதிய 59வது வார்டு என்பது பழைய வார்டுகள் 36 மற்றும் 37 ஆகியவற்றின் பகுதிகள் அடங்கியவை ஆகும்.

மேலும் ரிசர்வ் பெண் வேட்பாளர்களுக்கு புதிய வார்டுகளான 39 மற்றும் 47 ஆகியன ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 39வது வார்டு பழைய 59 மற்றும் 60 ஆகிய வார்டுகளின் பகுதிகள். புதிய 47வது வார்டு முந்தைய 35வது வார்டு முழுமையாகவும் 38வது வார்டில் சில பகுதிகளையும் கொண்டது. இது தவிர, பெண்கள் வார்டுகளாக, 1,2,3, 5, 7, 8, 9, 10, 12, 13, 14, 15, 16, 19, 21, 23, 30, 33, 38, 40, 45, 48, 50, 53, 55, 57,58 மற்றும் 60 ஆகிய 28 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 28 வார்டுகள் பொது வேட்பாளர்கள் வார்டுகளாக உள்ளன.

திருப்பூர் மாநகராட்சியில் 7,12 லட்சம் வாக்காளர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 3,62,353 ஆண், 3,50,247 பெண் மற்றும் 170 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 7,12,770 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 38வது வார்டில் 2,912 ஆண், 2,959 பெண் ஒரு 3ம் பாலினம் என மொத்தம் 5,872 வாக்காளர்கள் உள்ளனர். மாநகராட்சியில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட வார்டாக இந்த வார்டு உள்ளது. மேலும் 42வது வார்டில் 10,221 ஆண், 9,753 பெண் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 19,976 வாக்காளர்கள் உள்ளனர்.

மாநகராட்சியில் அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் இந்த வார்டில் உள்ளனர். மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் பெண்களைவிட ஆண் வாக்காளர்கள் மாநகராட்சி பகுதியில் அதிகம் உள்ளனர். இதில் 43, 47 மற்றும் 55 ஆகிய 3 வார்டுகளில் மட்டும் ஆண்களைவிட பெண் வாக்காளர் எண்ணிக்கை சற்று அதிகம் உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • france_elizabeth

    30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

  • assam-rain-17

    அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

  • ramnjamaiii

    ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

  • pudha_purnima

    உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

  • nellai-16

    நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்