தொடர் புகார் எதிரொலி போக்குவரத்து உதவி கமிஷனர் பணியிடமாற்றம்
1/29/2022 6:42:55 AM
திருப்பூர், ஜன. 29: திருப்பூர் மாநகரம் கேவிஆர் நகர், கொங்கு நகர் ஆகிய 2 சரகங்களுக்கும் போக்குவரத்து உதவி கமிஷனராக இருந்தவர் கொடிசெல்வன். இவர் மீது பல்வேறு புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி மாநகருக்குள் வருவதற்கு லாரி உரிமையாளர்கள் உதவி கமிஷனர் கொடிசெல்வனுக்கு பணம் கொடுப்பதாக கூறும் வீடியோ ஒன்று வைரலானது. தொடர் புகார் எதிரொலியாக கடந்த 26ம் தேதி டிஜிபி அலுவலகத்திலிருந்து அவருக்கு பணி இடமாறுதல் ஆணை வழங்கப்பட்டது. அதில் அவர் சென்னை, தாம்பரம் பகுதியில் உள்ள அதிவிரைவு படை உதவி கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சிறந்த விளையாட்டு வீரர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
அவிநாசி அரசு கல்லூரியில் நூலகம் திறப்பு பாரதி கொள்ளு, எள்ளு பேரன்கள் பங்கேற்பு
மாநில அளவிலான சதுரங்க போட்டியில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை
திருப்பூர் மாநகராட்சியில் ஏப்.30ல் கொரோனா தடுப்பூசி முகாம்
எம்ப்ராய்டரி பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
கருப்பராயன் கோவில் பொங்கல் திருவிழா கிடா வெட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!