SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை மாவட்ட உள்ளாட்சி தேர்தல் 60 இடங்களில் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

1/29/2022 6:35:49 AM

கோவை, ஜன. 29:  கோவை மாவட்டத்தில் 60 இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் துவங்கியுள்ளது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள் மற்றும் 33 பேரூராட்சிகள் என மொத்தம் 41 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு உறுப்பினர் பதவியிடங்களும், 7 நகராட்சிகளுக்குட்பட்ட 198 வார்டு உறுப்பினர்களுக்கும், 33 பேரூராட்சிகளுக்குட்பட்ட 513 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.

இத்தேர்தலில் கோவை மாநகராட்சிக்கு 1,290 வாக்குச்சாவடிகள், 7 நகராட்சிகளுக்கு 3,90 வாக்குச்சாவடிகள் மற்றும் 33 பேரூராட்சிகளுக்கு 632 வாக்குச்சாவடிகள் என மொத்தம் 2,312 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். இத்தேர்தலில் 41 தேர்தல் நடத்தும் அலுவலர்களும், 110 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒரு வாக்குச்சாவடிக்கு 4 வாக்குப்பதிவு அலுவலர்கள் வீதம் சுமார் 10,172 அலுவலர்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனர். கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு 20 இடங்களில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அதன்படி 13, 18, 19, 29, 30 ஆகிய 5 வார்டுகளுக்கு வடக்கு மண்டலத்தில் உதவி கமிஷனர் மோகன சுந்தரியிடம் மனுதாக்கல் செய்யலாம். 1, 2, 3, 14, 15 ஆகிய வார்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் ராஜ மாணிக்கம், 4,10,11,12,21 ஆகிய வார்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் உமாதேவி, 20, 25, 26, 27, 28 ஆகிய வார்டுகளுக்கு வடக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

5, 6, 8, 9, 22 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் குடிநீர் விநியோக கணக்கு பிரிவு அலுவலர் தமிழ்வேந்தன், 55,56,57,58,61 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (ஜேஎன்என்யூஆர்எம் பிரிவு ) ஜான்சன், 7, 23, 24, 54, 59 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) விமலா, 50, 51, 52, 53, 60 ஆகிய வார்டுகளுக்கு கிழக்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி ஆகியோரிடம் மனு தாக்கல் செய்யலாம்.

மேலும் 87, 88, 89, 90, 91 வார்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் அண்ணாதுரை, 92, 93, 94, 95, 97 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் மாணிக்கம், 76, 77, 78, 79, 86 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) ஜெயலட்சுமி, 85, 96, 98, 99, 100 ஆகிய வார்டுகளுக்கு தெற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் கருப்புசாமி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம்.

71, 72, 73, 74, 75 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் ஹேமலதா, 36, 42, 43, 44, 45 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (ஜேஎன்என்யூஆர்எம் பிரிவு) சுகந்தி, 37, 38, 39, 40, 41 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (ஜேஎன்என்யூஆர்எம் பிரிவு) பாலமுருகன், 16,17, 33, 34, 35 ஆகிய வார்டுகளுக்கு மேற்கு மண்டல அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (திட்டம்) கலாவதி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம். 62, 63, 64, 65, 84 ஆகிய வார்டுகளுக்கு மத்திய மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் சுந்தர்ராஜன், 48,49,67,68,70 ஆகிய வார்டுகளுக்கு மத்திய மண்டல அலுவலகத்தில் நிர்வாக அலுவலர் கணேஷ் குமார்,

31,32,46,47,69 ஆகிய வார்டுகளுக்கு டாடாபாத்தில் உள்ளூர் திட்டக்குழுமம் எதிரில் உள்ள உள்ள மாநகராட்சி பொறியாளர் பிரிவு அலுவலகத்தில் செயற்பொறியாளர் (திட்டம்) கருப்பாத்தாள், 66,80,81,82,83 ஆகிய வார்டுகளுக்கு மத்திய மண்டலத்தில் உள்ள வார்டு குழு தலைவர் அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் (ஜேஎன்என்யூஆர்எம் பிரிவு) ராமசாமி ஆகியோரிடம் மனுதாக்கல் செய்யலாம். இதேபோல் 33 பேரூராட்சிகளுக்கு அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களில் மனு தாக்கல் செய்யலாம். 7 நகராட்சிகளிலும் அந்தந்த நகராட்சி அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். அதன்படி, கோவை மாவட்டத்தில் 60 இடங்களில் வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் துவங்கியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்