SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அர்ச்சகர் வீட்டில் நகை கொள்ளை

1/29/2022 2:54:27 AM

திருவள்ளூர், ஜன.29: திருவள்ளூர் அடுத்த போலிவாக்கம் பாக்குபேட்டை கிராமம் ராமர் கோயில் தெருவை சேர்ந்தவர் கிரண்குமார்(32). அதே பகுதியில் உள்ள கோதண்டராமர் கோயிலில் அர்ச்சகர். இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கம்போல் கோயிலுக்குச் சென்று பூஜைகள் முடிந்து வீட்டிற்கு சென்றார். பின்னர் மீண்டும் மாலை திரும்பி வந்தபோது வீட்டின் பின்பக்கம் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த மோதிரம், கம்மல், செயின் என 2 சவரன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ₹3500 ரொக்கம் என மொத்தம் ₹1.50 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று இருப்பது தெரியவந்தது. புகாரின்படி மணவாளநகர் போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்