SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலாப்பட்டு மத்திய சிறைக்குள் கஞ்சா மற்றும் செல்போனை லோடுகேரியல் தனியார் ஒப்பந்த ஊழியர் கைது

1/28/2022 2:43:12 AM

காலாப்பட்டு, ஜன. 28: காலாப்பட்டு மத்திய சிறைக்குள் கஞ்சா மற்றும் செல்போனை லோடுகேரியல் எடுத்துச் சென்ற தனியார் ஒப்பந்த ஊழியர் சிக்கினார். புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. சிறைத்துறை ஐஜி ரவிதீப்சிங் சாகர் தேசியக்கொடி ஏற்றி வைத்து சிறைக் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். அப்போது கைதிகள் யோகா மற்றும் சிலம்பம் சாகசம் செய்தனர். இந்நிகழ்ச்சிக்காக அங்கு ஷாமியானா பந்தல் உள்ளிட்டவை அங்கு போடப்பட்டிருந்தது. இதற்காக சிறைத்துறையின் பணி ஒப்பந்ததாரர் மூலம் அங்கு இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக அங்கு வெளியில் இருந்து ஷாமியானா உள்ளிட்ட பொருட்களை லோடு கேரியர் வாகனத்தில் ஏற்றிச் சென்ற அண்ணா சாலையில் உள்ள பிரபல எலக்ட்ரிக்கல் நிறுவனத்தின் ஊழியரான வம்பாகீரப்பாளையம் பாஸ்கர் (39) என்பவருக்கு அங்குள்ள சக கைதிகளிடம் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே கைதிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்த சிலரை சந்தேகத்தின்பேரில் சிறை பணியாளர்களே கண்காணித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் பாஸ்கர் ஓட்டிவந்த லோடு கேரியர் வாகனத்தை திடீரென சோதனையிட்டனர்.

அப்போது அதில் 137 கிராம் கஞ்சா, 4 செல்போன்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் 10 பாக்கெட்டுகள், 5 சிகரெட் லைட்டர்கள், 4 பீடி பண்டல்கள், 2 செல்போன் சார்ஜர்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பாஸ்கரை கையும் களவுமாக பிடித்த சிறைத்துறை சூப்பிரெண்டு பாஸ்கரன் தொடர்ந்து அவரிடம் விசாரித்தார். அப்போது சிறையில் உள்ள விசாரணை கைதியான பாம் ரவி இரட்டைக் கொலை வழக்கில் தொடர்புடைய விக்கிக்கு அவற்றை எடுத்து வந்ததை அவர் ஒப்புக் கொண்டார்.  இச்சம்பவம் தொடர்பாக காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், எஸ்ஐ சிவப்பிரகாசம் (பொறுப்பு) தலைமையிலான போலீசார் சிறைத்துறையில் விதிமீறல் பிரிவின்கீழ் பாஸ்கர் மற்றும் கைதி விக்கி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் பாஸ்கரை கைது செய்த போலீசார், அவரை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். இவ்விவகாரம் தொடர்பாக சிறையில் உள்ள விக்கியை காலாப்பட்டு போலீசார் விரைவில் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • Mexico_Mayor

  மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!

 • manipurlandaa1

  தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!

 • America_Truck

  அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!

 • wild-fire-california-30

  கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!

 • tailllo111

  நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்