பள்ளி மாணவி தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடி குறுக்கு வழியில் கட்சியை வளர்க்க பாஜ முயற்சி
1/26/2022 5:21:24 AM
திருச்சி, ஜன. 26: பள்ளி மாணவி தற்கொலையில் அரசியல் ஆதாயம் தேடி குறுக்கு வழியில் கட்சியை வளர்க்க பாஜ முயற்சி செய்வதாக திருச்சியில் முத்தரசன் கூறினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒகேனக்கல் 2வது கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு அனுமதிக்க மாட்டோம் என கூறுவது மனித தன்மையற்றது. தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு பறிமுதல் செய்து அதை ஏலம் விடப்போகிறோம் என அறிவித்துள்ளது. இலங்கைக்கு நிதி உதவிகள் அளிக்கும் இந்திய அரசு மீனவர்கள் விவகாரம் தொடர்பாக அவர்களை கண்டிக்க மறுக்கிறார்கள்.
சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க வக்கற்ற அரசாக மோடி அரசு இருக்கிறது. அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். படகுகள் ஏலம் விடுவதை தடுக்க வேண்டும். தமிழக மீனவர்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது குறித்து தி.மு.கவுடன் சுமூகமாக பேசி முடிவெடுப்போம். தஞ்சையில் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் உறுதிப்படாத செய்தியை வைத்து கொண்டு அரசியல் ஆதாயம் தேட பா.ஜ.க முயற்சி செய்கிறது. குறுக்கு வழியில் அவர்கள் தங்கள் கட்சியை தமிழகத்தில் வளர செய்ய முயற்சி செய்து வருகிறார்கள். காவல் துறையால் தேடப்படும் குற்றவாளிகளை தங்கள் கட்சியில் பா.ஜ.க வினர் இணைத்து வருகிறார்கள். பாதிப்பு என்றால் துடித்து போகும் மோடி தமிழ்நாட்டிற்கு பாதிப்பு என்றால் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்.
மேலும் செய்திகள்
அதிகாரிகள் திடீர் ஆய்வில் அதிரடி சிறைவாச ரவுடிகள் இருவருக்கு குண்டாஸ்
ஜி.ஹெச் வளாகத்தில் முதியவர் சடலம் மீட்பு
நர்சிங் மாணவி தற்கொலை
மயங்கி விழுந்து காவலாளி சாவு
திருச்சி மாவட்டத்தில் 8.3 டன் விதைகள் விற்க தடை விதிப்பு
பேரறிவாளன் விடுதலையை கண்டித்து காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்