புதிதாக 1,911 பேருக்கு தொற்று புதுச்சேரியில் மேலும் 4 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
1/26/2022 5:18:49 AM
புதுச்சேரி, ஜன. 26:புதுச்சேரியில் கொரோனாவுக்கு 4 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், ஒரே நாளில் 1,911 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் கொரோனா 3வது அலை வேகமாக பரவி வருகிறது. நேற்று காலை 10 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 5,191 பேருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,911 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் புதுவையில் 1,410, காரைக்காலில் 331, ஏனாம் 151, மாகே 19 பேர் என 1,911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி கல்மண்டபத்தை சேர்ந்த 76 வயது பெண், கோரிமேடு காமராஜ் நகரை சேர்ந்த 67 வயது ஆண், திருவாண்டார்கோவிலை சேர்ந்த 55 வயது ஆண், காரைக்கால் திருநள்ளார் இருக்கன்குடியை சேர்ந்த 68 வயது பெண் என மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 1,912 ஆக அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 254 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்து 36 ஆயிரத்து 948 பேர் குணமாகி வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதுவரை 15 லட்சத்து 24 ஆயிரத்து 836 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் முதல் தடுப்பூசியை 9,18,381 பேரும், 2வது தடுப்பூசியை 6,00,734 பேரும், பூஸ்டர் தடுப்பூசியை 5,721 பேரும் போட்டுள்ளனர். இன்று மட்டும் முதல் டோசை 977 பேரும், 2வது டோசை 1,390 பேரும், பூஸ்டர் டோசை 776 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே பரபரப்பு சத்து மாத்திரை சாப்பிட்ட 30 மாணவ, மாணவிகள் மயக்கம்
விழுப்புரம் அருகே நள்ளிரவு விபத்து: செங்கல்சூளையில் வேலை முடிந்து வீட்டிற்கு சென்ற கணவன், மனைவி பலி
குடிபோதையில் பெட்ரோல் பங்க்கை சூறையாடிய ஆசாமிகள்
கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரி மாணவி தற்கொலை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 52 போலீசார் கூண்டோடு மாற்றம்
புதுச்சேரி, காரைக்காலில் மீன்பிடி தடைகாலம் இன்றுடன் நிறைவு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்