திமுக 12வது வட்ட கழகம் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முட்டை, பிஸ்கட் வழங்கல்
1/26/2022 3:07:37 AM
திருப்பூர்: திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, மத்திய மாவட்ட கழக பொறுப்பாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ ஆலோசனைபடி, திருப்பூர் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், திருப்பூர் தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், 15.வேலம்பாளையம் பகுதி கழக பொறுப்பாளர் கொ.ராமதாஸ் ஆகியோர் வழிகாட்டுதலின்படி கொரானா தோற்று நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முட்டை, பிஸ்கட் வழங்கும் நிகழ்ச்சி 12 வது வட்ட திமுக 15.வேலம்பாளையம், அம்மையப்பன் நகரில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு வடக்கு மாநகர பொறுப்புக்குழு உறுப்பினரும் 12வது வட்ட கழக பொறுப்பாளருமான சிட்டி வெங்கடாசலம் தலைமை தாங்கி அம்மையப்பன் நகர் பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர், முட்டை, பிஸ்கட்டுகளை வழங்கினார். திருப்பூர் மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினர் உமாமகேஸ்வரி, வட்ட கழக பொறுப்புக்குழு உறுப்பினர் குழந்தைவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வட்ட கழக பொறுப்புக்குழு உறுப்பினர்கள் செந்தில்குமார், நாகராஜ், சந்திரசேகர், பெருமாள், பாலசுப்பிரமணி, இளைஞரணி அமைப்பாளர் கார்த்திகுமார், துணை அமைப்பாளர் செளந்தர்ராஐன், செல்வம், ‘பந்தல்’முருகன், மேஸ்திரி கணேசன் உட்பட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
மேலும் செய்திகள்
10ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை
துணை ஜனாதிபதி வழியனுப்பு: குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் 2வது நாள் நிகழ்வுகள்
தமிழக முதல்வரிடம் மாநகராட்சி கவுன்சிலர் மனு
‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’37 கிராம ஊராட்சிகளில் காணொலி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்
ஓராண்டு ஆட்சி நூறாண்டு பேசும்: முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் அறிக்கை
கல்குவாரியில் ஆண்சடலம் மீட்பு அடையாளம் காண முடியாமல் மங்கலம் போலீசார் திணறல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்