நல்லூர் அருகே மதுபோதையில் 5 பேர் மீது தாக்குதல்
1/26/2022 3:07:26 AM
திருப்பூர்: திருப்பூர், காங்கயம் ரோடு, நல்லூர் அருகே மதுபோதையில் 5 பேர் மீது தாக்குதல் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் முதலிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பாளையத்தில் டாஸ்மாக் கடையில் நேற்று முன் தினம் இரவு மது அருந்திய ஆசாமி ஒருவர் அந்த பகுதியில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை பொதுமக்கள் தட்டிக்கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி, தொடர்ந்து அங்கிருந்து சென்று, தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து அந்த பகுதியை சேர்ந்த செல்வராம், மணிகண்டன், பாபு, சுந்தரம், காளிமுத்து ஆகிய 5 பேரை கத்தி மற்றும் கட்டைகளால் தாக்கிவிட்டு, தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த 5 பேரும் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் தாக்குதலில் ஈடுபட்டு விட்டு தப்பியோடிய கும்பலை கைது செய்ய வேண்டும் எனக்கூறி, அந்த பகுதி பொதுமக்கள் நேற்று முன் தினம் நள்ளிரவு காங்கேயம் பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு நல்லூர் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும், பொதுமக்களிடம் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் விரைவாக கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையே இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பலூரை சேர்ந்த பிரசாந்த் (22), பிரதீப் (22), மூணாறை சேர்ந்த ராஜேஷ் (24), சேலத்தை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ் (27) ஆகிய 4 பேரை நல்லூர் போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
10ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை
துணை ஜனாதிபதி வழியனுப்பு: குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் 2வது நாள் நிகழ்வுகள்
தமிழக முதல்வரிடம் மாநகராட்சி கவுன்சிலர் மனு
‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’37 கிராம ஊராட்சிகளில் காணொலி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்
ஓராண்டு ஆட்சி நூறாண்டு பேசும்: முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் அறிக்கை
கல்குவாரியில் ஆண்சடலம் மீட்பு அடையாளம் காண முடியாமல் மங்கலம் போலீசார் திணறல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்