கொரோனா, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படம் வெளியீடு
1/26/2022 3:06:38 AM
ஊட்டி: கொரோனா மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் வெளியிடும் நிகழ்ச்சி ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகித்தார். குன்னூர் தேயிலை வாரியம் செயல் இயக்குநர் பாலாஜி குறும்படத்தை வெளியிட்டார். தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பேசியதாவது: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் நோயினை கட்டுப்படுத்துவதற்காக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு வீச்சில் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல் போன்ற நிகழ்வுகள் குறித்து பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத நபர்கள் மீது அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்று நோய் குறித்து பொதுமக்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள விழித்திரு நீலகிரி, பாட்டி வைத்தியம் ஆகிய 2 குறும்படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாவட்டத்திலுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உன்னத உதகை என்ற தலைப்பில் குறும்படமும் வெளியிடப்பட்டது. எனவே, பொதுமக்கள் தமிழக அரசு தெரிவித்துள்ள நிலையான கொரோனா நோய் தொற்று வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். நீலகிரி மாவட்த்தினை பசுமை நிறைந்த மாவட்டமாக மாற்ற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயரமான், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) ஜாகீர் உசேன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
10ம் வகுப்பு மாணவி தற்கொலை குறித்து போலீசார் விசாரணை
துணை ஜனாதிபதி வழியனுப்பு: குமரகுரு கல்வி நிறுவனங்களின் யுகம் 2வது நாள் நிகழ்வுகள்
தமிழக முதல்வரிடம் மாநகராட்சி கவுன்சிலர் மனு
‘கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம்’37 கிராம ஊராட்சிகளில் காணொலி மூலம் முதல்வர் துவக்கி வைக்கிறார்
ஓராண்டு ஆட்சி நூறாண்டு பேசும்: முன்னாள் எம்எல்ஏ கோவை தங்கம் அறிக்கை
கல்குவாரியில் ஆண்சடலம் மீட்பு அடையாளம் காண முடியாமல் மங்கலம் போலீசார் திணறல்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்