கொரோனா சிகிச்சை வார்டில் முகக்கவசம் அணியாமல் சுற்றித்திரியும் மக்கள்: அரசு மருத்துவமனையில் அவலம்
1/26/2022 2:22:05 AM
செங்கல்பட்டு: .சென்னைக்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் தினமும் கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. இதுகுறித்து, அரசு மற்றும் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. தமிழக அரசின் ஆணைப்படி, மாவட்ட நிர்வாகம் எவ்வளவு விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் மத்தியில் சிறிதும் கூட அச்சமோ, பதற்றமோ இல்லை என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றை சமாளிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என தனித்தனி வார்டுகளாக பிரித்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால், கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள், அடிக்கடி வார்டில் இருந்து வெளியே சென்று, டிபன் சாப்பிட்டுவிட்டு அலட்சியமாக வார்டுக்கு வருகின்றனர்.
அதேபோல், நோயாளிகளை சந்திக்க வரும் உறவினர்கள், சர்வ சாதாரணமாக கொரோனா தன்மையை அறியாமல், அலட்சியமாக குழந்தைகளுடன், முகக்கவசம் அணியாமல் பிக்னிக் செல்வது போல் வந்து செல்கின்றனர். இதில், மருத்துவமனை நிர்வாகம் கொரோனா முதல் மற்றும் 2ம் அலையின்போது கடைபிடித்த விதிமுறைகளை தற்போது கடைபிடிக்கவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறுகையில், பொதுமக்களுக்கு இன்னும் கொரோனா பற்றி தெளிவு வரவில்லை. மருத்துவமனைக்கு வருபவர்களை முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். கொரோனா சிகிச்சை வார்டில் உறவினர்களை அனுமதிக்க கூடாது. நோயாளிகளை வெளியே செல்ல அனுமதிக்க கூடாது. மருத்துவமனை நிர்வாகம் என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாலும், நோயாளிகளையும், அவர்களை சந்திக்க வருபவர்களையும் கண்காணித்து அரசு விதிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தினால் மட்டுமே கொரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்கமுடியும் என்றனர்.
மேலும் செய்திகள்
தேவாத்தூர் ஊராட்சியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி; குளம் அருகில் இருப்பதால் பெற்றோர் அச்சம்: அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் நகைகளை விட்டுச்சென்ற பெண்: கண்டுபிடித்து கொடுத்த காவலாளிக்கு பாராட்டு
வனத்துறை சார்பில் இன்று கருத்து கேட்பு கூட்டம்
கருங்குழியில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!