திருக்கழுக்குன்றம் திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை
1/26/2022 2:20:25 AM
திருக்கழுக்குன்றம்: மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் திமுக சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வீ.தமிழ்மணி தலைமை தாங்கினார். திருக்கழுக்குன்றம் பேரூர் செயலாளர் ஜி.டி.யுவராஜ் முன்னிலை வகித்தார். திருக்கழுக்குன்றம் ஒன்றிய திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ஜாகீர்உசேன், வடக்கு ஒன்றிய இளைஞரணி நிர்வாகிகள் பரந்தாமன், எம்.கே.தினேஷ், பேரூர் நிர்வாகிகள் செங்குட்டுவன், வேதகிரி, சரவணன், இளங்கோ, அழகிரி, மோகன்ராஜ், சுரேஷ், மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், மகளிரணி இணை செயலாளரும், எம்எல்ஏவுமான மரகதம் குமரவேல் ஆகியோர் முன்னிலையில், மதுராந்தகம் பஸ் நிலையம் எதிரில் அமைக்கப்பட்டு இருந்த மொழிப்போர் தியாகிகளின் படத்துக்கு, அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் செய்திகள்
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
வாடகை கொடுக்க முடியாததால் விரக்தி: சமையல் தொழிலாளி தற்கொலை
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,927 வழக்குகளுக்கு தீர்வு
காமாட்சி அம்மன் சன்னதி தெருவில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்
திருக்கழுக்குன்றம் அடுத்த தண்டரை கிராமத்தில் ரூ. 2.22 கோடி மதிப்பீட்டில் பொது கட்டிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறப்பு: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
விலங்குகள் தவறி விழுவதை தவிர்க்க திறந்து கிடக்கும் கிணற்றுக்கு இரும்பு கம்பி வலை அமைக்கப்படுமா?
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்