மனைவியை பிரிந்து வீட்டின் மேல்தளத்தில் வசித்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மர்ம சாவு
1/26/2022 2:19:00 AM
ஆவடி: மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வீட்டின் மேல் தளத்தில் வசித்த, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி மர்மமாக இறந்து கிடந்தார். திருமுல்லைவாயல் வேணுகோபால் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் ரவிசங்கர்(68). ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. இவரது மனைவி கீதா(60). தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். கடந்த 3 ஆண்டுக்கு முன்பு தம்பதிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ரவிசங்கர் வீட்டில் முதல் தளத்திலும், கீதா கீழ்தளத்தில் வசித்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று மதியம் வீட்டு பணிப்பெண் விஜயா(47), ரவிசங்கருக்கு மதியம் சாப்பாடு எடுத்துக்கொண்டு மேல் தளத்திற்கு சென்றார். அப்போது, அங்கு அவர் இல்லை. ரவிசங்கரை வீட்டின் கீழ் தளத்தில் தேடி உள்ளார். அப்போது, ரவிசங்கர் கிணற்றில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார்.
தகவலறிந்த ஆவடி தீயணைப்பு அதிகாரி தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் கயிறு கட்டி இறங்கி ரவிசங்கர் உடலை மீட்டனர். மேலும், திருமுல்லைவாயல் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பினர். புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவிசங்கர் மர்மச்சாவு குறித்து விசாரிக்கின்றனர்.
மேலும் செய்திகள்
அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகம்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
புறநகர் மின்சார ரயில்களில் கைவரிசை: செல்போன் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
புதர்மண்டி பயன்பாடில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமான திருவாலங்காடு உழவர் சந்தை
பொன்னேரி அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!