தேசிய வாக்காளர் தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
1/26/2022 2:18:13 AM
திருவள்ளூர்: கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று தேசிய வாக்காளர் தினத்தையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கலெக்டர் தலைமை தாங்கி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் உறுதி மொழியை வாசித்தார். அதனை பின்தொடர்ந்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் வாசித்து உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து கலெக்டர் இளம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டைகளை வழங்கினார். மேலும், மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் சிறந்த முறையில் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே வாக்காளர் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற கட்டுரைப் போட்டி, பாட்டுப் போட்டி, ஓவியப் போட்டி, நடனப்போட்டி, சொற்தொடர் போட்டி, சுவரொட்டி போட்டி ஆகிய போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) குணசேகரன், பயிற்சி உதவி கலெக்டர் அனாமிகா ரமேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் முரளி, வித்யா, வட்டாட்சியர்கள் செந்தில்குமார், கண்ணன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகம்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
புறநகர் மின்சார ரயில்களில் கைவரிசை: செல்போன் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
புதர்மண்டி பயன்பாடில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமான திருவாலங்காடு உழவர் சந்தை
பொன்னேரி அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!