திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் பூசணிக்காயில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபாடு
1/26/2022 12:26:36 AM
திருமயம், ஜன.26: திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் நடைபெற்ற தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் பூசணிக்காயில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் இந்து அறநிலைய துறைக்கு சொந்தமான கோட்டை பைரவர் கோயில் உள்ளது. இதுமதுரை, காரைக்குடி செல்லும் முக்கிய சாலையில் உள்ளதால் சாதாரன நாட்களில் இங்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கோட்டை பைரவர் கோயிலில் பூசணிக்காய், மிளகு முடிச்சு தீப வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக 27 பூசணிக்காயை இரண்டாக வெட்டி அதில் எண்ணெய், நெய் ஊற்றி விளக்கேற்றினர். இதனை தொடர்ந்து சிறப்பு வழிபாடு, ஆராதனை நடைபெற்றது. இதனிடையே கோயிலுக்கு வந்த பக்தர்களும் பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர். இந்த வழிபாட்டில் கலந்து கொள்ள சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்தனர்.
மேலும் செய்திகள்
திருமயம் அருகே திருவேட்டழகர் கோயில் வளாகத்தில் சிமெண்ட் கல் தளம் திறப்பு
டிரைவர், கண்டக்டர் பற்றாக்குறையால் அரசு பணிமனையில் பேருந்துகள் நிறுத்திவைப்பு
பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோயில் ஆடி தேரோட்டம்
பொன்னமராவதி பகுதி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு
கந்தர்வகோட்டை வெள்ளை முனியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜை
75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் மூவண்ண கொடி ஏற்ற பிரசாரம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!