மன்னார்குடியிலிருந்து ஜெய்ப்பூருக்கு 2 லட்சம் முட்டைகள் ரயிலில் அனுப்பி வைப்பு
1/25/2022 3:10:14 AM
மன்னார்குடி, ஜன.25: நாமக்கல்லில் இருந்து 2 லட்சம் முட்டைகள் 4 மினி லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு மன்னார்குடி ரயில் நிலையத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு பயணிகள் ரயில் மூலம் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இந்தியாவில் முட்டை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாமக்கல் மண்டலத்தில் இருந்து சாலை போக்குவரத்து மூலமும் ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ரயில்கள் மூலமும் வெளி மாநிலங்களுக்கு முட்டைகள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், நாமக்கல்லில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு 2 லட்சம் முட்டைகள் ஆயிரம் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு சாலை மார்க்கமாக 4 மினி லாரிகள் மூலம் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ரயில் நிலையத்திற்கு நேற்று காலை கொண்டு வரப்பட்டது. பின்னர், மன்னார்குடியில் இருந்து ஜோத்பூருக்கு செல்லும் பகல்கீ கோத்தி பயணிகள் விரைவு ரயிலின் பார்சல் வேகனில் முட்டைகள் அடங்கிய பெட்டிகள் ஏற்றப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இப்பணிகளை நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
மேலும் செய்திகள்
திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் 36,000 ஏக்கரில் சம்பா தாளடி சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்: குறுவை சாகுபடி அதிகரிப்பு
பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
திருவாரூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் கிராம சபை கூட்டத்தில் வேளாண் அலுவலர்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும்
திருவாரூரில் இருந்து சேலத்திற்கு பொதுவிநியோக திட்டத்திற்கு 1,250 டன் அரிசி அனுப்பி வைப்பு
மக்களை காப்பதில் அக்கறை காட்டி பொதுசுகாதாரத்தில் அசத்தும் முத்துப்பேட்டை வட்டார மருத்துவத்துறை
மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 10 ஆயிரம் பேர் பயன் திருவாரூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் குடிசை வீடுகள் கான்கிரீட் வீடுகளாக மாற்றப்படும் அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
பெருநாட்டில் பயங்கர நிலச்சரிவு : 36 பேர் உயிரிழப்பு..!
துருக்கியில் அடுத்தடுத்து 5 நிலநடுக்கங்கள்..வீதிகள் எங்கும் மரண ஓலம்... 6,000ஐ எட்டும் பலி எண்ணிக்கை!!
உச்ச கட்டத்தை எட்டியது புத்தாண்டு கொண்டாட்டம்: சீனாவில் களைகட்டிய விளக்கு திருவிழா..!!
சீனாவில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து: 16 பேர் உயிரிழப்பு
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 1,300-ஐ தாண்டியது..!!