சாஸ்த்ரா சத்சங்கத்தின் சங்கீத வாசஸ்பதி விருதுகள் 2022
1/25/2022 3:10:00 AM
சென்னை: சாஸ்த்ரா சத்சங்கத்தின் 2022ம் ஆண்டிற்கான சங்கீத வாசஸ்பதி விருதுகள் கடந்த 22ம் தேதி சென்னையில் வழங்கப்பட்டன. மிருதங்க வித்வான் திருவாரூர் பக்தவச்சலம், ஆன்மிக சொற்பொழிவாளர் டாக்டர் சுதா சேஷையன், நாதஸ்வர சகோதரர்கள் காசிம் மற்றும் பாபு ஆகியோர் இவ்விருதுகளை பெற்றனர். ஒவ்வொருவருக்கும் ₹1 லட்சம் பரிசும், சான்றிதழும் வழங்கப்பட்டது.
தற்போது டோக்கியோவில் வசித்து வரும் திருச்சியை சேர்ந்த டாக்டர் கே.இ.சீத்தாராம் விருதுகளை வழங்கி பேசினார். கர்நாடக இசை சொற்பொழிவு மற்றும் பாரம்பரிய கலை ஆகிய மூன்று பிரிவுகளில் இந்த விருதுகளை வழங்கியதற்காக சாஸ்த்ரா சத்சங்கத்தை பெரிதும் பாராட்டினார். இந்த மூன்று துறைகளும் இந்திய கலை மற்றும் பண்பாட்டுடன் பெரிதும் தொடர்புடையன என்றார். இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் பெறப்பட்டு விருதுபெற்ற விஜய் சிவாவால் அறிவிக்கப்பட்டன.
விருதுகளை பெற்ற மூவரும் தியாகராஜ சுவாமிகளின் 175வது ஆராதனை நாளில் இந்த விருதை பெறுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். சாஸ்த்ரா சத்சங்கம் ‘கிரேஸ் ஆப் ராய்ஸ்’ என்ற புகழ்பெற்ற கலைஞர்கள் பாடிய இசைவடிவிலான ஆதித்ய ஹிருதயம் இசை ஆல்பத்தை வெளியிட்டது. இந்த ஆல்பம் சாஸ்த்ரா சத்சங்க யுடியூபிலும், அதன் இணையதளத்திலும் கிடைக்கும்.
மேலும் செய்திகள்
தேவாத்தூர் ஊராட்சியில் சுற்று சுவர் இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ஆதிதிராவிடர் நடுநிலை பள்ளி; குளம் அருகில் இருப்பதால் பெற்றோர் அச்சம்: அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
குன்றத்தூரில் ஏடிஎம் குப்பை தொட்டியில் 43 பவுன் நகைகளை விட்டுச்சென்ற பெண்: கண்டுபிடித்து கொடுத்த காவலாளிக்கு பாராட்டு
வனத்துறை சார்பில் இன்று கருத்து கேட்பு கூட்டம்
கருங்குழியில் 5 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ரயில்வே மேம்பால பணி: விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
கேளம்பாக்கம் அருகே ரூ.35 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் மீட்பு
வாடகை கார் டிரைவர் கொலை வழக்கில் 2வது நாளாக சடலத்தை வாங்க உறவினர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனை முற்றுகை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!