வேதாரண்யம் மீனவர்கள் 3 பேரை கடலில் தள்ளிவிட்ட கொடூரம்: இலங்கை கடற்கொள்ளையர் அட்டகாசம்
1/25/2022 3:06:08 AM
வேதாரண்யம்: வேதாரண்யத்தை சேர்ந்த 11 மீனவர்களை தாக்கி அவர்களிடமிருந்து வலை, ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதில் 3 பேரை கடலில் தள்ளி விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனத்தை சேர்ந்த நாகமணி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த நாகமுத்து (44), பன்னீர்செல்வம்(45), ராஜேந்திரன்(54) ஆகிய 3பேரும் நேற்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்பொழுது ஒரு படகில் வந்த 3 இலங்கை கடற்கொள்ளையர்கள், புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி அவர்களை கம்பு, இரும்பு கம்பிகளால் தாக்கியதோடு 3 பேரையும் கடலில் தள்ளி விட்டனர். பின்னர் படகில் இருந்த 200கிலோ எடையுள்ள வலை, ஜிபிஎஸ் கருவி, வாக்கிடாக்கி செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். அப்போது அவர்கள் படகில் இருந்து டீசலையும் எடுத்து சென்றனர்.
இதனால் கரைக்கு வர முடியாமல் தத்தளித்த மீனவர்கள் அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் 2 லிட்டர் டீசலை வாங்கி நிரப்பி கொண்டு ஆறுகாட்டுத்துறைக்கு வந்து சேர்ந்தனர். பின்னர் அங்கிருந்த சக மீனவர்கள் உதவியுடன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.
இதேபோல் புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த வாசுகி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று அதிகாலை அதே ஊரை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் புஷ்பவனத்திற்கு தென்கிழக்கே 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது 3 படகில் வந்த 9 இலங்கை கடற்கொள்ளையர்கள், புஷ்பவனம் மீனவர்களின் படகில் ஏறி இரும்பு கம்பி, வால் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி மிரட்டியதோடு படகில் இருந்த இன்வேட்டர் பேட்டரி, ஜி.பி.எஸ் கருவி, டார்ச் லைட், 20லிட்டர் டீசல், ஐஸ்பாக்ஸ், ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், டூல்ஸ் பாக்ஸ், சிக்னல் லைட் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
அழிஞ்சிவாக்கம் கிராமத்தில் பராமரிப்பின்றி கிடக்கும் நூலகம்
வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
புறநகர் மின்சார ரயில்களில் கைவரிசை: செல்போன் திருடிய 2 பேர் பிடிபட்டனர்
புதர்மண்டி பயன்பாடில்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமான திருவாலங்காடு உழவர் சந்தை
பொன்னேரி அருகே ரூ.80 லட்சம் மதிப்பு அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் அதிரடி
செங்குன்றத்தில் பயங்கரம்: முன்விரோத தகராறில் ரவுடி வெட்டி கொலை: 2 பேர் கைது
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!