மொழிப்போர் தியாகி சின்னச்சாமிக்கு கீழப்பழுவூர் பேருந்து நிலையம் அருகே மணிமண்டபம் அமைக்க வேண்டும்
1/25/2022 3:06:00 AM
அரியலூர்,ஜன.25: மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி மணிமண்டபத்தை பேருந்து நிலையம் அருகே அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசு 1963ம் ஆண்டு இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல் மொழிச் சட்டம் அமல்படுத்துவது எதிர்த்து தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது திருச்சி மாவட்டம் தற்போது அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரை சேர்ந்த சின்னசாமி இவர் திருச்சிக்கு சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டு அதன் ரசீதுடன் தமிழுக்கு தன் உயிரை விடப் போவதாகவும் எழுதிய கடிதத்தை தன் நண்பருக்கு அனுப்பியுள்ளார்.
பின்னர் 1964ம் ஆண்டு ஜனவரி 25ம் நாள் திருச்சி ரயில் நிலையத்தில் அதிகாலை 4.30 அளவிற்கு தன் மீது பெட்ரோலை ஊற்றி கொண்டு தமிழ் வாழ்க, தமிழ் வாழ்க, இந்தி ஒழிக எனக்கத்தி கொண்டே இந்தி திணிப்பை கண்டித்து தீக்குளித்து உயிரிழந்தார். இதனையடுத்து ஜனவரி 25ம் நாள் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாக திமுக, அதிமுக, மதிமுக போன்ற திராவிட கட்சிகள் கடைபிடித்து வருகிறனர். இவருக்கு மார்பளவு கொண்ட உருவச்சிலை கீழப்பழுவூர் பேருந்து நிலையத்தில் 2011ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு நிறுவியது. அந்த சிலையை தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போதைய திறந்து வைத்தார். தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 25ம் நாள் மொழிப்போர் தியாகிகள் தினத்தன்று கீழப்பழுவூரில் உள்ள சின்னசாமி சிலைக்கு அனைத்து கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மொழிப்போர் தியாகத்தை நினைவு கூறும் வகையில் கீழப்பழுவூர் சின்னச்சாமிக்கு ரூ.1 கோடி மதிப்பிலான மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்தார். இந்த மணிமண்டபம் கீழப்பழுவூர் பேருந்து நிலையம் அருகே ஊராட்சி மன்ற கட்டிடத்திற்கு முன்பு அமைக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தமிழ் ஆர்வலர்கள் தமிழுக்காக இன்னுயிரை ஈந்த சின்னச்சாமியின் வரலாறு மற்றும் தமிழ் மொழியின் பெருமையை அறிவார்கள் எனவே பேருந்து நிலையத்திற்கு அருகே அரசு அறிவித்த மணிமண்டபத்தை அமைக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அதிமுக, பாமகவினர் திமுகவில் ஐக்கியம் விபத்தில் தொழிற்சங்க தலைவர் மூளை சாவு
மூளையில் கட்டி மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு கிராம இளைஞர்கள் நிதியுதவி
பெரம்பலூர் மாவட்டத்தில் போதைபொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
தலித் கிறிஸ்தவர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
மது பாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
ஏரியில் தவறி விழுந்து முதியவர் பலி
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...