அடையாளம் தெரியாத ஆண் சடலம்
1/25/2022 1:55:25 AM
கடலூர், ஜன. 25: கடலூர் அருகே உள்ள சின்னகங்கணாங்குப்பத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர் ரெட்டிச்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்த நபர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்