கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ₹39 லட்சம் அபராதம் வசூல்
1/25/2022 1:53:40 AM
கடலூர், ஜன. 25: கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாதவர்களிடமிருந்து அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று முன்தினம் முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றித்திரிந்த 752 பேர் மீதும், சமூக இடைவெளியை கடைபிடிக்காத 11 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து 1 லட்சத்து 55 ஆயிரத்து 900 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் நேற்று வரை முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 19 ஆயிரத்து 430 பேர் மீது வழக்கு பதிவு செய்து, 39 லட்சத்து 2 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!