மகன் துன்புறுத்துவதாக தந்தை புகார்
1/24/2022 12:35:56 AM
கடலூர், ஜன. 24: கடலூர் மாவட்ட எஸ்பி சக்திகணேசன், பெண்களின் நலன் காக்க லேடிஸ் பஸ்ட் மற்றும் முதியோர்களின் நலன் காக்க ஹலோ சீனியர் என்ற புதிய காவல் உதவி எண்களை அறிமுகப்படுத்தினார். கடலூர் மாவட்டம் முஷ்ணத்தை சேர்ந்த தர்மலிங்கம் (75) என்பவர் ஹலோ சீனியர்ஸ் காவல் உதவி எண்ணில் தொடர்புகொண்டு, தனது மகன் தன்னிடம் இருந்து சொத்துக்களை வாங்கி கொண்டு தன்னை அடித்து துன்புறுத்துவதாக புகார் தெரிவித்தார். இதையடுத்து முஷ்ணம் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் நேரில் சென்று விசாரித்து தர்மலிங்கத்திடம் எந்த ஒரு பிரச்னையும் செய்யக்கூடாது என்று அவரது மகனுக்கு அறிவுரை கூறி பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டது. இதே போல கடந்த 22ம் தேதி மாவட்ட காவல் அலுவலகத்தில் எஸ்பியிடம் நேரில் புகார் மனு அளித்த விஜயலஷ்மி (31), ரகுராம்சிங் (35), பழனி (55), ரமேஷ்பாபு ஆகியோரின் புகார் மனு மீது சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!