விருத்தாசலம் பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறி இயங்கிய வாகனங்கள்
1/24/2022 12:35:46 AM
விருத்தாசலம், ஜன. 24: விருத்தாசலம் பகுதியில் நேற்று முழு நேர ஊரடங்கு காரணமாக பாலக்கரை, கடைவீதி, கடலூர் ரோடு, சேலம் ரோடு, ஜங்ஷன் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள வணிக ஸ்தாபனங்கள் மூடப்பட்டிருந்தது. விருத்தாசலம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று விருத்தாசலத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் திருமணம் நடைபெற்றதால் திருமண நிகழ்ச்சிக்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து சென்றனர். இதன் காரணமாக அதிக அளவிலான வாகனங்கள் விருத்தாசலம் பகுதியில் இயங்கின.மேலும் அனுமதி இல்லாத டிராக்டர்கள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள், கார்கள் என அனைத்து வாகனங்களும் இயங்கின. போலீசாரின் கெடுபிடி இல்லாத காரணத்தால் இந்த அளவிற்கு வாகனங்கள் இயங்கியதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
கோடை விடுமுறை முடிந்து கடலூர் மாவட்டத்தில் 2,180 பள்ளிகள் திறப்பு
வீடு கட்டும் திட்டத்தில் அலைக்கழிப்பு ஆட்சியரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதி
நடராஜர் கோயிலுக்கு சொந்தமான குளம், நிலங்களை மீட்க வேண்டும்
கருகும் பயிர்கள்: விவசாயிகள் வேதனை
பழுதான சாலையால் வாகனஓட்டிகள் அவதி
உடல்நலக் குறைவால் இறந்த குரங்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்