குழாய் உடைப்பை சரிசெய்ய தோண்டப்பட்ட பள்ளத்தை மூட பொதுமக்கள் வலியுறுத்தல்
1/24/2022 12:33:49 AM
நெல்லிக்குப்பம், ஜன. 24: நெல்லிக்குப்பம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தினமும் காலை, மாலை என இருவேளையும் நகராட்சி மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லிக்குப்பம் விநாயகர் கோயில் பேருந்து நிறுத்தம் அருகில், குடிநீர் குழாயில் கடந்த வாரம் உடைப்பு ஏற்பட்டு சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதையறிந்த நகராட்சி பணியாளர்கள், உடனடியாக அப்பகுதியில் குடிநீர் விநியோகத்தை நிறுத்தினர். பின்னர் அந்த இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். ஆனால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டதால், உடைப்பு ஏற்பட்ட பைப்பை அகற்றிவிட்டு, பிளாஸ்டிக் பைப்பை கொண்டு உடைப்பை சரி செய்தனர். தொடர்ந்து குழாய் இணைப்பில் இருந்து ராமு வீதிக்கு செல்லும் பைப்பில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்தனர். ஆனால் மீண்டும் அதே இடத்தில் தண்ணீர் கசிவு ஏற்படுகிறது.மேலும் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது. பேருந்து நிறுத்தம் அருகே பள்ளம் மூடப்படாமல் உள்ளதால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குடிநீர் கசிவை சரி செய்து, பள்ளத்தை மூடி முறையாக குடிநீர் வழங்க நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகள்
ரயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை
ஆசிரியை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 7 பவுன் நகை பறிப்பு
கிருஷ்ணா பேக்கரி, ஸ்வீட்ஸ் கடை திறப்பு
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் இல்லத் திருமண விழா
கடலூர், கம்மாபுரம் ஒன்றியங்கள் ஆறு பகுதிகளாக பிரிப்பு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்