(தி.மலை) ஸ்ரீவெங்கடேசபெருமாள், ஆஞ்சநேயர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் போளூர் அருகே
1/24/2022 12:29:35 AM
போளூர், ஜன.24: போளூர் அருகே வெங்கடேசபெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் கோயிகளில் மஹா கும்பாபிஷேகம் நடந்தது. போளூர் அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் புதிதாக வெங்கடேசபெருமாள், ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் பந்தகால் நடப்பட்டு, மங்கலம் இசை முழங்க காலை 7.00 மணிக்கு விஷ்வக்சேனா, மகா கணபதி பிரார்த்தனை, வேதகாம ஆச்சாரி யவர்ணம், அனுக்ஞை, கோபூஜை, லஷ்மி, சுதர்சன கணபதி, நவக்கிரக ேஹாமம், பூர்ணாஹூதி, இரவு மருந்து சாற்றுதல் நடைபெற்றது.
இதையடுத்து நேற்று கோ பூஜை, சங்கல்பம், 2ம் கால யாகசாலை பூஜை ஆரம்பம், மகா கும்ப புறப்பாடு, மகா சம்ப்ரோஷணம் அலங்காரம், தீபாரதனை, வேதபிரபந்தம், தமிழ்மறை சாற்று முறை, தீர்த்த பிரசாதம் விநியோகம் நடைபெற்றது. மங்கல இசை முழங்க பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் எம்எல்ஏக்கள் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி (போளூர்), சேவூர் எஸ்.ராமசந்திரன் (ஆரணி) உட்பட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் செய்திகள்
திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
விவசாயிக்கு நஷ்ட ஈடு வழங்ககோரி சாலைமறியல் 2 கி.மீட்டர் தூரம் அணிவகுத்து நின்ற வாகனங்கள் லாரி மோதி படுகாயமடைந்த
திருவண்ணாமலையில் பெட்ரோல் விலை ₹110ஐ தொட்டது வாகனஓட்டிகள் கடும் அதிர்ச்சி
சேத்துப்பட்டு அருகே கிணற்றில் அழுகிய நிலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு கொலை செய்து வீச்சா?.
செங்கம் அருகே 30 இருளர் இன குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க டிஆர்ஓ ஆய்வு
சேத்துப்பட்டு அருகே பைக் மீது கார் மோதி முதியவர் பலி
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்