பனியன் தொழிலை பாதுகாக்க கோரி பாஜவினர் உண்ணாவிரதம்
1/22/2022 6:25:57 AM
திருப்பூர், ஜன. 22: திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் கம்பெனிகளும், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜாப்ஒர்க் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் கட்டிங், அயர்னிங், டைலரிங், பேக்கிங், செக்கிங், நிட்டிங், சிங்கர், கைமடித்தல், டேமேஜ், அடுக்குதல், லோக்கல் மெஷின் ஆகிய பிரிவுகளில் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அபரிதமான நூல் விலை உயர்வால், தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பனியன் தொழிலை பாதுகாக்கவும், தொழில்துறைக்கு தேவையான நூல், பருத்தி, மின்சாரம் போன்றவற்றுக்கு மானியம் வழங்கக்கோரியும், பாஜ சார்பில் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. திருப்பூரில் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக அவிநாசி ரோடு இருந்து வருகிறது. இதனால் இப்பகுதி எந்நேரமும் போக்குவரத்து நெரிசலுடன் காணப்படும். பாஜக.,வினரின் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வாகனங்களில் வந்தவர்கள், தங்களது வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி பவர் டேபிள் நிறுவனங்கள் ஸ்டிரைக் 10ம் தேதி துவக்கம் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பயனாளிகள் குவிந்ததால் பரபரப்பு: போலீசார் குவிப்பு
தாய்,மகன்கள் கொலை வழக்கில் தனிப்படை குற்றவாளியை நெருங்கியது
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி துவங்கியது
மேயர் அஞ்சலி காதல் தகராறில் கத்திக்குத்து மேலும் 2 பேர் கைது
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!