மகப்பேறு மருத்துவமனையை கொரோனா வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலைமறியல்
1/22/2022 6:25:35 AM
திருப்பூர், ஜன. 22: திருப்பூரில் மகப்பேறு மருத்துவமனையை கொரோனா வார்டாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து புதுராமகிருஷ்ண புரம் பகுதியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். திருப்பூர், புதுராமகிருஷ்ணபுரம் பகுதியில் மாநகராட்சி எல்.ஆர்.ஜி.ஆர் மகப்பேறு மருத்துவமனை உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்படுவதுடன் பிரசவமும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த மருத்துவமனையை தற்போது கொரோனா வார்டாக மாற்றுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனையறிந்த அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கொரோனா வார்டாக மாற்றும் முயற்சியை கைவிடக்கோரி அப்பகுதியில் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வடக்கு போலீசார் மற்றும், மாநகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி பவர் டேபிள் நிறுவனங்கள் ஸ்டிரைக் 10ம் தேதி துவக்கம் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பயனாளிகள் குவிந்ததால் பரபரப்பு: போலீசார் குவிப்பு
தாய்,மகன்கள் கொலை வழக்கில் தனிப்படை குற்றவாளியை நெருங்கியது
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி துவங்கியது
மேயர் அஞ்சலி காதல் தகராறில் கத்திக்குத்து மேலும் 2 பேர் கைது
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!