காங்கேயம் பகுதிகளில் ரூ.6.06 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகள்
1/22/2022 6:25:26 AM
திருப்பூர், ஜன. 22: காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.6 கோடியே 6 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்ட பணிகளை, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தூர் பேரூராட்சி, வெள்ளகோவில் மற்றும் காங்கேயம் நகராட்சி பகுதிகளில் ரூ.6 கோடியே 6 லட்சம் மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தார். இதற்கு கலெக்டர் வினீத் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் வளர்ச்சிக்கென பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பதவியேற்ற சில மாதத்தில் ஏராளமான வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளார். அந்த வகையில் தற்போது முத்தூர் பேரூராட்சி மாதவராஜபுரம் மற்றும் ஸ்ரீராம்நகரில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.78 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வடிகால் அமைக்கும் பணி, வாரச்சந்தை வளாகத்தில் ரூ.3 கோடி மதிப்பில் மேம்படுத்துதல் பணி, பெருமாள்புதூர் கிழக்கு பகுதியில் ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு செய்யப்பட்ட பணி மற்றும் மகாலட்சுமிநகரில் ரூ.35 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் பின்னர் வெள்ளகோவில் நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேலும், வெள்ளகோவில் நகராட்சி நடேசன் நகரில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பில் மேல்நிலைத்தொட்டி சுற்றுச்சுவர் அமைக்கும் பணி மற்றும் வேலகவுண்டன்பாளையம் காலனியில் ரூ.25 லட்சம் மதிப்பில் 1 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி அமைக்கும் பணி, காங்கேயம் நகராட்சி அய்யாசாமிநகரில் ரூ.28 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி, சென்னிமலை சாலையில் ரூ.21 லட்சம் மதிப்பில் குடிநீர் குழாய் மாற்றி அமைக்கும் பணி, எம்.ஜி.ஆர். காடு பகுதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் மேல்நிலை தொட்டிக்கு பின்புறம் சுற்றுச்சுவர் கட்டுதல் பணி, தண்ணீர்பந்தல் காலனியில் ரூ.32 லட்சம் மதிப்பில் நிரூற்று நிலையத்தில் சுற்றுச்சுவர் மற்றும் பராமரிப்பாளர் அறை கட்டுதல் பணி என மொத்தம் ரூ.6 கோடியே 6 லட்சம் மதிப்பிலான புதிய திட்ட பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் தாராபுரம் ஆர்.டி.ஓ. குமரேசன், உதவி செயற்பொறியாளர் மோகன், முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகள்
கூலி உயர்வு பேச்சுவார்த்தை தோல்வி பவர் டேபிள் நிறுவனங்கள் ஸ்டிரைக் 10ம் தேதி துவக்கம் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஏழைகளுக்கு வழங்கப்பட்ட இலவச நிலம் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற பயனாளிகள் குவிந்ததால் பரபரப்பு: போலீசார் குவிப்பு
தாய்,மகன்கள் கொலை வழக்கில் தனிப்படை குற்றவாளியை நெருங்கியது
திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
காண்டூர் கால்வாய் சீரமைப்பு பணி துவங்கியது
மேயர் அஞ்சலி காதல் தகராறில் கத்திக்குத்து மேலும் 2 பேர் கைது
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!
அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி
மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!
பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!