30 ஆண்டுக்கு பின் ஆர்.சி., காலனி பகுதி மக்களுக்கு சாலை வசதி
1/22/2022 6:21:07 AM
ஊட்டி,ஜன.22: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ஆர்.சி., காலனி பகுதியில் 30 ஆண்டுக்கு பின் எம்எல்ஏ.,வின் முயற்சியால் சாலை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பிங்கர் போஸ்ட் பகுதியில் ஆர்.சி., காலனி உள்ளது. இங்கு 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் சாலை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால், இச்சாலையை சீரமைக்க முடியாத நிலை இருந்து வந்தது. இதனால், கடந்த 30 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி இப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க கோரி ஊட்டி எம்எல்ஏ., கணேஷை சந்தித்து கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்தனர். இதனை தொடர்ந்து, ஊட்டி எம்எல்ஏ., கணேஷ், ஆர்.சி., காலனி பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார். இதனை தொடர்ந்து, இச்சாலையை சீரமைக்க வனத்துறை அதிகாரிகளும் ஒப்புக் கொண்டனர். தற்போது வனத்துறையினர் பிங்கர்போஸ்ட் பகுதியில் இருந்து ஆர்.சி., காலனிக்கு செல்லும் சாலையை கான்கிரீட் சாலையாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 30 ஆண்டுகளாக சாலை வசதி இன்றி தவித்து வந்த மக்கள் தற்போது ஊட்டி எம்எல்ஏ., கணேஷிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
பேப்பர் கப்புகளை பயன்படுத்திய தனியார் ஓட்டலுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் 21ம் தேதி ஊட்டியில் நடக்கிறது
அஞ்சலக வாடிக்கையாளர் குறை தீர்க்கும் கூட்டம் கோவையில் 28ம் தேதி நடக்கிறது
கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற குந்தை சீமை பார்பத்திக்கு பாராட்டு விழா
அச்சத்தை போக்கும் வகையில் அரசு பள்ளியில் 1ம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு நூதன வரவேற்பு
காந்தல் சாலையில் நிழற்குடை அமைக்க வலியுறுத்தல்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!