தினமும் 4,500 பேருக்கு கொரோனா பரிசோதனை
1/22/2022 6:13:18 AM
ஈரோடு, ஜன. 22: ஈரோடு மாவட்டத்தில் தினமும் 4,500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2ம் அலையின்போது அதிகபட்சமாக தினசரி பாதிப்பு 1,700 வரை பதிவானது. கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை உடனுக்குடன் கண்டறியும் வகையில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பாதிப்பு அதிகரித்ததையடுத்து தினமும் 10 ஆயிரம் வரையிலான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் காரணமாக பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியப்பட்டு, அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சை அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஈரோடு மாவட்டத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இருப்பினும் மாவட்டத்தில் தற்போது தினமும் 4 ஆயிரம் முதல் 4,500 கொரோனா பரிசோதனைகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் இதுவரை 25 லட்சத்து 43 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பதுக்கினால் தகவல் தெரிவிக்கலாம் ஈரோடு போலீசார் வலியுறுத்தல்
கொரோனா காரணமாக ரத்தான 1ம் தேதி முதல் ஓய்வூதியர் நேர்காணல் நடத்த முடிவு
கஞ்சா விற்ற 4 பேர் கைது
தீ குளித்து மூதாட்டி பலி
கோபி மொடச்சூரில்தாய் சேய் நலவிடுதி திறப்பு
குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்