SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அடிப்படை வசதிக்காக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

1/22/2022 6:10:07 AM

திண்டுக்கல், ஜன. 22: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியம் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதும் சாலை வசதி, வாறுகால் வசதி, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை நிறைவேற்ற  கோரி நேற்று  கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்பாட்டம் நடந்தது. ஒன்றிய கவுன்சிலர் செல்வநாயகம் தலைமையில் 70க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2019-20ம் ஆண்டு எம்எல்ஏ நிதியில் கட்டப்பட்ட பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் ஆகியவற்றை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சாலை வசதி , வாறுகால் வசதி போன்ற அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் அஜாய்கோஷ், ஒன்றிய செயலாளர் சரத்குமார், ஊராட்சி தலைவர் செல்வகணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் முடித்து கலெக்டர் பிஒவிடம் மனு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • peru_Clowns Day

    பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு

  • yercaussss

    ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!

  • america_primery

    அமெரிக்க தொடக்கப்பள்ளியில் துப்பாக்கிசூடு..!! குழந்தைகள் உள்பட 20 பேர் பலி

  • shortest-man-world-25

    மொத்த உயரமே 73 செ.மீ. தான்!: கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக குள்ளமான மனிதர்..!!

  • modheadd1

    பிரதமர் மோடி அணிந்த வித்தியாசமான தலைப்பாகைகள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்