கொரோனா பரவல் அதிகரிப்பு 4 ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்
1/22/2022 12:11:19 AM
நாகர்கோவில், ஜன.22: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பஸ், ரயில்கள் பொது போக்குவரத்து வழக்கம் போல் உள்ளது. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ேதாறும் ஊரடங்கையொட்டி, போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மேலும் இரவு நேர ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக தற்போது சில ரயில் சேவைகளை நிறுத்தவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி திருவனந்தபுரம் கோட்டத்தில் 4 ரயில்களின் சேவை தற்காலிகமாக இன்று (22ம்தேதி) முதல் 27ம் தேதி வரை 6 நாட்கள் நிறுத்தப்படுகிறது.
நாகர்கோவில் சந்திப்பு - கோட்டயம் எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 16366), கொல்லம் சந்திப்பு - திருவனந்தபுரம் சென்ட்ரல் (வண்டி எண் 06425), கோட்டயம் - கொல்லம் சந்திப்பு ( வண்டி எண் 06431), திருவனந்தபுரம் சென்ட்ரல் - நாகர்கோவில் சந்திப்பு (வண்டி எண் 06435) ஆகிய ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
மேலும் செய்திகள்
குமரியில் பரவலாக பெய்த சாரல் மழை
ஓடும் பஸ்சில்பெண்ணிடம் செயின் அபேஸ்
கன்னியாகுமரியில் பைக் அரசு பஸ் மோதல் மாணவர் உள்பட 2 பேர் பலி: வாலிபர் படுகாயம்
குமரி கடலில் சூறைக்காற்று விசைப்படகுகள் கரை திரும்பின மீன்பிடி தொழில் பாதிப்பு
குமரி முழுவதும் சூறைக்காற்றுடன் மழை
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் பறக்கும் தேசிய கொடி பயணிகள் மகிழ்ச்சி
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்..!!