பண்ருட்டியில் சிபிஐ சாலை மறியல்
1/22/2022 12:10:10 AM
பண்ருட்டி, ஜன. 22: விக்கிரவாண்டி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அமைப்பதில் காலதாமதம், சேதமடைந்த சாலை ஆகியவற்றை சீரமைக்காத காரணத்தால் பல்வேறு உயிரிழப்புகள் ஏற்படுவது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத தேசிய நெடுஞ்சாலைத்துறையினரை கண்டித்தும் சிபிஐ கட்சி சார்பில் நகர செயலாளர் சக்திவேல் தலைமையில் நான்கு முனை சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில் ஒன்றிய குழு தனபால், மாவட்ட செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் கண்டரகோட்டையில் முன்னாள் மாவட்ட குழு சிவக்குமார், துணை செயலாளர் ராஜா உள்ளிட்ட பலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காடாம்புலியூரில் ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் சாலை மறியல் நடந்தது. இதில் 42 நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
கோடை விடுமுறை முடிந்து கடலூர் மாவட்டத்தில் 2,180 பள்ளிகள் திறப்பு
வீடு கட்டும் திட்டத்தில் அலைக்கழிப்பு ஆட்சியரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதி
நடராஜர் கோயிலுக்கு சொந்தமான குளம், நிலங்களை மீட்க வேண்டும்
கருகும் பயிர்கள்: விவசாயிகள் வேதனை
பழுதான சாலையால் வாகனஓட்டிகள் அவதி
உடல்நலக் குறைவால் இறந்த குரங்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்