விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்
1/22/2022 12:10:04 AM
விருத்தாசலம், ஜன. 22: கடலூர் மாவட்டத்தின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான விருத்தாசலம் நகரம் சுமார் ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகள் மற்றும் அண்டை மாநில பகுதிகளுக்கும் செல்வதற்கான பேருந்து வசதிகள் உள்ளது. இதனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு, பேருந்து நிலையத்தை அழகுபடுத்தும் நோக்கமாக, பேருந்துகள் உள்ளே செல்லும் பகுதி மற்றும் வெளியே செல்லும் பகுதிகளில் ஆர்ச்சுகள் மற்றும் சுற்றுச் சுவரை ஒட்டி இரண்டு புறங்களிலும் மண்மேடுகள் அமைக்கப்பட்டு அதில் பூச்செடிகள் வைப்பதற்காக பல லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் மண்மேடுகள் அமைக்கப்பட்டதுடன் மற்ற பணிகள் எதுவும் நடைபெறாமல் அப்பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் பயன்பாடின்றி இருந்த மண்மேடுகள், சிமெண்ட் கட்டைகள் போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்து வந்தது. மேலும் அவைகள் பராமரிப்பின்றி இருந்தது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் பயன்பாடின்றி இருந்த மண்மேடுகள் மற்றும் சுவர்கள் அனைத்தும் அகற்றும் பணிகளில் நேற்று நகராட்சியினர் ஈடுபட்டனர். அப்போது பேருந்து நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இடங்களையும் இடித்து அப்புறப்படுத்தினர். இதில் நகராட்சி இளநிலை பொறியாளர் ராமன், வருவாய் ஆய்வர் மணிவண்ணன் மற்றும் வருவாய் உதவியாளர்கள் பலர் உடன் இருந்தனர்
மேலும் செய்திகள்
கோடை விடுமுறை முடிந்து கடலூர் மாவட்டத்தில் 2,180 பள்ளிகள் திறப்பு
வீடு கட்டும் திட்டத்தில் அலைக்கழிப்பு ஆட்சியரிடம் ரேஷன் கார்டை ஒப்படைக்க வந்த மாற்றுத்திறனாளி தம்பதி
நடராஜர் கோயிலுக்கு சொந்தமான குளம், நிலங்களை மீட்க வேண்டும்
கருகும் பயிர்கள்: விவசாயிகள் வேதனை
பழுதான சாலையால் வாகனஓட்டிகள் அவதி
உடல்நலக் குறைவால் இறந்த குரங்கு இறுதிச்சடங்கு செய்த கிராம மக்கள்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்